லண்டனில் சிறிலங்கா அரசுடன் நடைபெறும் ரகசிய சந்திப்பு தொடர்பாக தீபம் தொலைகாட்சியில் நேர்காணல் வழங்கிய வண்ணான் ரமணன் (கட்டாடியார் பஞ்சகுலசிங்கம் கந்தையா) அனைத்துலக ஈழத்தமிழர் மக்குகள் அவையின் பிரதிநிதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடையம் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது. வண்ணான் எமது அமைப்பின் பிரதிநிதி அல்ல என்பதையும் அத்தோடு எமது உறுப்பு நாடான நோர்வே ஈழத் தமிழரவை நிர்வாகத்தின் சார்பாகவும் அவர் இச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் நாம் உறுதிப்படுத்தி இத்துடன் தெரிவிக்கின்றோம். அண்மையில் நோர்வே ஈழத் தமிழரவை மற்றும் சுவீடன் தமிழர் பேரவையும் அத்தோடு மலேசியா தமிழர் அவையும் உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகிக்கொண்டனர். அவ்வாறு அண்மையில் விலகிய அமைப்புகளை தொடர்ந்தும் தமது இணையதளத்தில் தமது உறுப்பு நாடுகளாக வைத்திருப்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. குறிப்பிட்ட அமைப்புகளிடம் இருந்து பலதடவை தமது அமைப்புகளின் பதிவுகளை இணையத்தளத்தில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டும் இன்றுவரை அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அவர்களின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகின்றது. அத்தோடு சிறிலங்கா அரசுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்குகள் அவை எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் இங்கு தெரிவிக்கின்றோம்.
Som oversettes, vennligst vent...
